மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட ஊராட்சியிலுள்ள அனைத்து ஊராட்சி குழு உறுப்பினர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர். காவிரியாற்றின் குறுக்கே, கர்நாடகா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட ஊராட்சியிலுள்ள அனைத்து ஊராட்சி குழு உறுப்பினர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர். காவிரியாற்றின் குறுக்கே, கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை, கர்நாடக அரசு கைவிட வேண்டும். அதற்கு துணையாக, மத்திய அரசு செயல்படக்கூடாது. மார்கண்டேயன் நதிக்கு குறுக்கே யார்கோள் தடுப்பணை திட்டத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய தொழிலுக்கு பாதகம் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X