பொது செய்தி

தமிழ்நாடு

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ.,க்கள், சிவசாமி, தென்னரசு ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர். நேற்று காலை, 6:00 மணியளவில், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி பாலம் அருகே சென்ற பொலிரியோ பிக்அப்வேனை மடக்கி சோதனையிட்டதில், இரண்டு டன் ரேஷன் அரிசி கர்நாடகத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. வேனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ.,க்கள், சிவசாமி, தென்னரசு ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர். நேற்று காலை, 6:00 மணியளவில், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி பாலம் அருகே சென்ற பொலிரியோ பிக்அப்வேனை மடக்கி சோதனையிட்டதில், இரண்டு டன் ரேஷன் அரிசி கர்நாடகத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. வேனை ஓட்டிய கர்நாடக மாநிலம், பங்கார்பேட், ஹாரோஹள்ளியை சேர்ந்த ராமு, 26, என்பவரை கைது செய்து ரேஷன் அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, நேற்று காலை, 7:00 மணிக்கு, பாகலூர்-சர்ஜாபூர் சாலையில் ஆம்னி வேனில், 1,100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பலைச் சேர்ந்த கர்நாடக மாநிலம், பங்கார்பேட், ஹாரோஹள்ளி பகுதி மஞ்சுநாத், 33 யஷ்வந்த்புரா பகுதி நாகேஷ் ஆகியோரை கைது செய்து அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X