கிருஷ்ணகிரி - திண்டிவனம் 180 கி.மீ., சாலை விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி - திண்டிவனம் 180 கி.மீ., சாலை விரிவாக்க பணி மீண்டும் துவக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரியிலிருந்து திண்டிவனம் வரை, 180 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த, 2010ல் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு மாற்றத்தால்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.


கிருஷ்ணகிரியிலிருந்து திண்டிவனம் வரை, 180 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த, 2010ல் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு மாற்றத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. குண்டும், குழியான இச்சாலையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி முதல் சிங்காரப்பேட்டை வரை தற்காலிகமாக சாலையை சீரமைத்தாலும், மழைக்காலங்களில் மீண்டும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. சாலை விரிவாக்க பணிகளை இரண்டாக பிரித்து மேற்கொள்ள வேண்டும் என, கடந்த ஜனவரியில் கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லக்குமார் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி கடந்த ஒரு மாதமாக சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X