பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் சசிகலா போஸ்டர்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணத்தில், கடந்த வாரம் சந்தூரை சேர்ந்த சிலர் அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்க சசிகலா வரவேண்டும் என, போஸ்டர்கள் அடித்தனர். இந்நிலையில், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளை கடுமையாக சாடியும், சசிகலாவுக்கு ஆதரவாகவும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணத்தில், கடந்த வாரம் சந்தூரை சேர்ந்த சிலர் அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்க சசிகலா வரவேண்டும் என, போஸ்டர்கள் அடித்தனர். இந்நிலையில், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளை கடுமையாக சாடியும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்து, ஊழலில் சம்பாதித்த பணத்தை கொடுத்து, மீண்டும் சட்டசபை தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றதால், அவர்கள் பின், அ.தி.மு.க., உள்ளது என அர்த்தம் இல்லை. அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமியின் சொந்த ஊரான காவேரிப்பட்டணத்தில் அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X