அரசு நிலத்தில் மீன் குட்டை: தி.மு.க., பிரமுகர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தில் மீன் குட்டை: தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
தஞ்சாவூர்: அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியில்லாமல் மீன் குட்டை அமைக்க முயன்ற, தி.மு.க., பிரமுகர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 54. ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர். இவர், மூரியன் குட்டை எனும் குளத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு

தஞ்சாவூர்: அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியில்லாமல் மீன் குட்டை அமைக்க முயன்ற, தி.மு.க., பிரமுகர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 54. ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர். இவர், மூரியன் குட்டை எனும் குளத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில், ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் உதவியுடன் மீன் குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். பொதுமக்கள் தகவல்படி, ஒரத்தநாடு டி.எஸ்.பி., சுனில், தாசில்தார் சீமான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அங்கு ஆய்வு செய்தனர். செல்வராஜ், தனக்கு சொந்தமான நிலம் என தகராறு செய்துள்ளார். அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்ததில், அது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிந்தது. இதையடுத்து, செல்வராஜ், டிராக்டர் உரிமையாளர் ராஜாங்கம், 44; டிராக்டர் டிரைவர் பிரபு, 36 ஜே.சி.பி., டிரைவர் ராமச்சந்திரன், 48 ஆகிய நான்கு பேரை ஒரத்தநாடு போலீசார் கைது செய்தனர். ஜே.சி.பி., உரிமையாளரும், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்புக் குழு உறுப்பினருமான அப்பாதுரையை தேடி வருகின்றனர். ஜே.சி.பி., இயந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X