பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம்

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சி: திருச்சியில் விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டபோது, விவசாயி ஒருவர், திடீரென உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் நேற்று, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், காந்தி சிலை அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், முற்றுகை போராட்டம் நடந்தது. தேசிய- தென்னிந்திய நதிகள்

திருச்சி: திருச்சியில் விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டபோது, விவசாயி ஒருவர், திடீரென உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் நேற்று, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், காந்தி சிலை அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், முற்றுகை போராட்டம் நடந்தது. தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக, நேற்று காலை, 8:30 மணிக்கு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் புறப்பட்டனர். திருச்சி, அண்ணாமலை நகரில் இருந்து புறப்பட்ட விவசாய சங்கத்தினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே விவசாய சங்கத்தினர், கரூர் பைபாஸ் சாலையில் அரை நிர்வாணமாக அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது. அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், விவசாய சங்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், விவசாயி ஒருவர், உடைகள் அனைத்தையும் களைந்து, நிர்வாணமாக நின்றபடி கோஷம் எழுப்பினார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை உடைகளை அணிய வைத்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அனுமதி பெறாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர், 23 பேரை, கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202118:44:14 IST Report Abuse
செல்வா அணை கட்டவே அனுமதி இல்லை அதற்கு எதற்கு போராட்டம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X