பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தர்மபுரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நல்லம்பள்ளி, கரூர் பள்ளப்பட்டி வாரச்சந்தைகளில் நேற்று, நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.தர்மபுரி மாவட்டத்திலுள்ள, நல்லம்பள்ளி வாரச்சந்தையில், தீபாவளி, பொங்கல் கரிநாள், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களையொட்டி, அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இன்று, பக்ரீத் பண்டிகையை

தர்மபுரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நல்லம்பள்ளி, கரூர் பள்ளப்பட்டி வாரச்சந்தைகளில் நேற்று, நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.


தர்மபுரி மாவட்டத்திலுள்ள, நல்லம்பள்ளி வாரச்சந்தையில், தீபாவளி, பொங்கல் கரிநாள், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களையொட்டி, அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இன்று, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின், பல்வேறு பகுதிகளில் இருந்தும், அதிகளவில் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை, 5:00 மணி முதல் சந்தையில் கூடிய வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆர்வத்துடன், ஆடுகளை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர். இதனால், வழக்கமாக, 10:00 மணி வரை ஆடு கிடைக்கும், இச்சந்தையில் நேற்று, 8:00 மணிக்கே, ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்று தீர்ந்தன. இதனால் ஆடுகள் வாங்க, 8:00 மணிக்கு மேல் வந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.


* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளபட்டியில் பக்ரீத் பண்டிகைக்காக கூடிய ஆட்டு சந்தையில், மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பள்ளபட்டியில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஆட்டு சந்தைக்கு பள்ளபட்டி, அரவக்குறிச்சி, கரூர், பரமத்தி, சின்னதாராபுரம், பழநி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து விவசாயிகளும், ஆடு வியாபாரிகளும் செம்மறி ஆடுகளுடன் வந்து குவிந்தனர். குறைந்தபட்சம் ஒரு செம்மறி ஆடு, 15 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு சந்தை நடந்த இரண்டு நாளில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உளளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X