பொது செய்தி

தமிழ்நாடு

முதற்கட்டமாக 60 தனியார் பஸ் இயக்கம் துவக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், கொரோனா தளர்வுக்கு இடையே நேற்று முதல் குறைந்த பயணிகளுடன், 60 தனியார் பஸ் இயக்கம் துவங்கியது. கொரோனா பொது முடக்கத்துக்குப்பின் கடந்த, 4 முதல் பொது போக்குவரத்துக்கு சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள, 820 பஸ்களில், 400 பஸ் இயக்கம் துவங்கி, தற்போது, 600 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு, 50 சதவீத பயணிகள்

ஈரோடு: ஈரோட்டில், கொரோனா தளர்வுக்கு இடையே நேற்று முதல் குறைந்த பயணிகளுடன், 60 தனியார் பஸ் இயக்கம் துவங்கியது. கொரோனா பொது முடக்கத்துக்குப்பின் கடந்த, 4 முதல் பொது போக்குவரத்துக்கு சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள, 820 பஸ்களில், 400 பஸ் இயக்கம் துவங்கி, தற்போது, 600 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு, 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதித்தல் போன்ற காரணத்தால் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்போது, 60 தனியார் பஸ்களை இயக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முடிவு செய்து, நேற்று முதல் இயக்கத்துக்கு வந்தது. இதுபற்றி சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், ''முதற்கட்டமாக, 60 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும் நாட்களில் பிற பஸ்களும் இயக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X