பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு கனி மார்க்கெட்டில் ஆடி விற்பனை தொடக்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில், ஆடி மாத விற்பனை சூடுபிடித்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு, பன்னீர்செல்வம் பார்க்கில், கனி (ஜவுளி) மார்க்கெட், கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதமாக மூடப்பட்டிருந்தது. தளர்வால் சில வாரமாக இயங்கி வருகிறது. ஆனால், வாராந்திர ஜவுளி சந்தைக்கு, அனுமதி வழங்காததால், ??? நிரந்தர கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆடி பண்டிகை ஜவுளி

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில், ஆடி மாத விற்பனை சூடுபிடித்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


ஈரோடு, பன்னீர்செல்வம் பார்க்கில், கனி (ஜவுளி) மார்க்கெட், கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதமாக மூடப்பட்டிருந்தது. தளர்வால் சில வாரமாக இயங்கி வருகிறது. ஆனால், வாராந்திர ஜவுளி சந்தைக்கு, அனுமதி வழங்காததால், ??? நிரந்தர கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆடி பண்டிகை ஜவுளி விற்பனை, மார்க்கெட்டில் அமோகமாக நடக்கும். கடந்த ஆண்டு வியாபாரம் பாதித்த நிலையில், தற்போது எதிர்பார்த்த வியாபாரம் நடப்பதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது: சில்லரை வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக உள்ளது. அதாவது, 60 சதவீதம் சில்லரை விற்பனை, 40 சதவீதம் மொத்த விற்பனை நடக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட சில்லரை வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்கின்றனர். ஆடி பண்டிகைக்கு இன்னும் இரு வாரம் உள்ளதால், வரும் நாட்களில் வியாபாரம் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X