பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் பிரமாண்ட காய்கறி மார்க்கெட் டெக்ஸ்டைல் யுனிவர்சிட்டி; அமைச்சர் உறுதி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ''ஈரோட்டில் பிரமாண்ட காய்கறி மார்க்கெட், டெக்ஸ்டைல் யுனிவர்சிட்டி அமைக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு மாநகராட்சியில் வாட்ஸ்ஆப் செயலி மூலம், புகார் அளிக்கும் மொபைல் எண் அறிமுக விழா, நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இவற்றை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்தூமி, நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு: ''ஈரோட்டில் பிரமாண்ட காய்கறி மார்க்கெட், டெக்ஸ்டைல் யுனிவர்சிட்டி அமைக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.


ஈரோடு மாநகராட்சியில் வாட்ஸ்ஆப் செயலி மூலம், புகார் அளிக்கும் மொபைல் எண் அறிமுக விழா, நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இவற்றை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்தூமி, நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி மக்கள், ஏராளமான புகார்களை தெரிவிக்கின்றனர். அந்த புகாரை சுலபமாக பெற்று, விரைவாக தீர்வு காண வாட்ஸ் ஆப் செயலி புகார் எண்: 94890 92000 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடைகளில் சாயக்கழிவு பிரச்னை இருக்கக்கூடாது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சோலார் பகுதியில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கலெக்டர், கமிஷனர் ஆய்வு செய்துள்ளனர். அத்துடன், ஈரோட்டில் நவீன காய்கறி மார்க்கெட் அமையும். ஈரோட்டில் டெக்ஸ்டைல் யுனிவர்சிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X