சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: அறச்சலூர் வி.ஏ.ஓ., கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அருகே, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் அறச்சலூர், வடுகபட்டி, வடக்கு வீதி குமார் மனைவி புவனேஸ்வரி, 35; குமார் இறந்து விட்டார். புவனேஸ்வரி, 950 சதுர அடி வீட்டின் இடத்தை, பட்டா மாறுதல் செய்ய, அறச்சலூர், வடுகபட்டி 'ஆ' கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை, 30, அணுகினார். ஏற்கனவே, 19 ஆயிரம்

ஈரோடு: ஈரோடு அருகே, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம் அறச்சலூர், வடுகபட்டி, வடக்கு வீதி குமார் மனைவி புவனேஸ்வரி, 35; குமார் இறந்து விட்டார். புவனேஸ்வரி, 950 சதுர அடி வீட்டின் இடத்தை, பட்டா மாறுதல் செய்ய, அறச்சலூர், வடுகபட்டி 'ஆ' கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை, 30, அணுகினார். ஏற்கனவே, 19 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனாலும், மேலும் பேரம் பேசி, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் தெரிவித்தார். அவர்களின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய, 10 ஆயிரம் ரூபாயை, வி.ஏ.ஓ.,விடம் நேற்று மதியம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வெற்றிவேலை கையும் களவுமாக கைது செய்தனர். கைதான வெற்றிவேலுக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 2014 ஜூன், 30ல் பணியில் சேர்ந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X