சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.2.22 லட்சம் வழிப்பறி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஓசூர்: பேரிகை அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரிடம், 2.22 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, எனக்கபீரனப்பள்ளியை சேர்ந்தவர் பரமேஷ், 25; புக்கசாகரம் அருகே உள்ள, தனியார் பெட்ரோல் பங்க்கில், கடந்த ஓராண்டாக, மேலாளராக உள்ளார். கடந்த, 17, 18ல் பங்கில் வசூலான, இரண்டு லட்சத்து, 22 ஆயிரத்து, 270 ரூபாயை, காமன்தொட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்ய,

ஓசூர்: பேரிகை அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரிடம், 2.22 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, எனக்கபீரனப்பள்ளியை சேர்ந்தவர் பரமேஷ், 25; புக்கசாகரம் அருகே உள்ள, தனியார் பெட்ரோல் பங்க்கில், கடந்த ஓராண்டாக, மேலாளராக உள்ளார். கடந்த, 17, 18ல் பங்கில் வசூலான, இரண்டு லட்சத்து, 22 ஆயிரத்து, 270 ரூபாயை, காமன்தொட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்ய, பஜாஜ் பல்சர் பைக்கில் நேற்று முன்தினம் சென்றார். புக்கசாகரம்-காமன்தொட்டி சாலையில், சுண்டட்டி குட்டை அருகே, மற்றொரு பைக்கில் வந்த, மூன்று பேர் கும்பல், அவரை வழிமறித்து, அவரிடமிருந்த பணம் மற்றும் மொபைல்போனை கத்தி முனையில் பறித்து தப்பியது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பரமேஷ், பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதால், பெட்ரோல் பங்க் நிர்வாகம், அவர் மன்னிப்பு கேட்டதால், தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தது. இந்நிலையில், பணம் வழிப்பறி நடந்ததாக, பேரிகை போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளார். அவரது தகவல் முன்னுக்கு, பின் முரணாக உள்ளதால், தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அப்பகுதியில், 'சிசிடிவி' கேமரா பதிவுகள் ஏதும் உள்ளதா என, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X