பொது செய்தி

தமிழ்நாடு

யார்கோளால் வறண்ட மாரச்சந்திரம் தடுப்பணை: எண்ணேகொல்புதூர் - படேதலாவ் திட்டம் நிறைவேற்றப்படுமா?

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: யார்கோள் தடுப்பணை கட்டப்பட்டதால், நீர்வரத்தின்றி மாரச்சந்திரம் தடுப்பணை வறண்டது. இதனால், எண்ணேகொல்புதூர்-படேதலாவ் திட்டத்தை செயல்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, யார்கோள் என்னுமிடத்தில் பிரமாண்ட தடுப்பணை கட்டியது. இதனால்,

கிருஷ்ணகிரி: யார்கோள் தடுப்பணை கட்டப்பட்டதால், நீர்வரத்தின்றி மாரச்சந்திரம் தடுப்பணை வறண்டது. இதனால், எண்ணேகொல்புதூர்-படேதலாவ் திட்டத்தை செயல்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, யார்கோள் என்னுமிடத்தில் பிரமாண்ட தடுப்பணை கட்டியது. இதனால், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையிலும், மார்கண்டேய நதியின் தமிழக நீராதாரம் தடம் தெரியாமல் அழிந்துள்ளது. மாரச்சந்திரம் - குப்பச்சிபாறை தடுப்பணை முற்றிலும் வறண்டு விட்டது. இதிலிருந்து வெளியேறும் நீர், எண்ணேகொல்புதூர் தென்பெண்ணையாற்றில் இணையும். மாரச்சந்திரம் தடுப்பணையின் இடதுபுற வாய்க்கால் வழியாக வெளியேறும் நீர், பெரிய ஏரி எனப்படும் படேதலாவ் ஏரியில் இணையும். தற்போது கர்நாடகா கட்டிய யார்கோள் அணையால், இவை அனைத்தும், இனி சாத்தியம் இல்லை. எண்ணேகொல்புதூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை எண்ணேகொல்புதூர் - படேதலாவ் திட்டத்தில், கிரு??ஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்துக்கு, 276 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில், படேதலாவ் ஏரிக்கு அமைக்கப்பட உள்ள புதிய இடதுபுற பிரதான வாய்க்காலின் நீளம், 23 கிலோ மீட்டர். இத்திட்டம் செயல்படுத்தப்படுமென கடந்த, 2017ல், அ.தி.மு.க., அரசு அறிவித்தது. கடந்த பிப்., 2019ல், 36 ஊராட்சி தலைவர்கள், விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகளை பற்றி, எந்த தமிழக கட்சிகளும் கண்டுகொள்ளாமல் வஞ்சித்த நிலையில், எண்ணேகொல்புதூர் - படேதலாவ் திட்டத்தின், 23 கி.மீ., வாய்க்கால் பணியை, அரசு விரைந்து முடிக்காமல் மெத்தனமாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுமார், 269 ஏக்கரில் அமைந்துள்ள படேதலாவ் எனப்படும் பெரிய ஏரியிலிருந்து செல்லும் நீரைக்கொண்டு கிருஷ்ணகிரி, பர்கூரை சேர்ந்த, 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, இத்திட்டத்தையாவது விரைந்து முடிக்க வேண்டும். காவிரி நீருக்காக ஒன்றிணைந்து போராடுபவர்கள், தென்பெண்ணை, பாலாற்றை கண்டு கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X