பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஐ.டி., விபரம் சேகரிக்க உத்தரவு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், டிவி, மொபைல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதி குறித்த விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவால், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இரு மாதங்களாகியும், இன்னும் பள்ளிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ,

சேலம்: அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், டிவி, மொபைல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதி குறித்த விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவால், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இரு மாதங்களாகியும், இன்னும் பள்ளிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கற்றல் பணி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், கற்றல் பணியை மேற்கொள்ள, 'டிவி', மொபைல் போன், கணினி, இணையவசதி உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அந்தந்த உபகரணங்கள் மூலம், ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றல் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளவும், உபகரணங்கள் இல்லாத மாணவ, மாணவியருக்கு, மாற்று வழிகளில் கற்பிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X