ரூ.1.17 கோடி மோசடி: ஜவுளி கடைக்காரர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.17 கோடி மோசடி: ஜவுளி கடைக்காரர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
சேலம்: பட்டு சேலைகளை, 1.17 கோடி ரூபாய்க்கு வாங்கி பணம் தராத ஜவுளி கடை உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கொண்டலாம்பட்டி, இட்டேரி சாலையில், ஜவுளி கடையை நடத்துபவர் மல்லி சுரேஷ், 35. அழகாபுரத்தில், ஜவுளி கடை நடத்துபவர் சங்கர், 40. இவருக்கு, பட்டு சேலைகளை மொத்த விலைக்கு, மல்லி சுரேஷ் விற்று வந்தார். 2018 நவ., 12 முதல், 2019 ஜன., 9 வரை, மல்லி சுரேஷ், ஒரு கோடியே, 17 லட்சத்து, 61 ஆயிரத்து, 680 ரூபாய்

சேலம்: பட்டு சேலைகளை, 1.17 கோடி ரூபாய்க்கு வாங்கி பணம் தராத ஜவுளி கடை உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கொண்டலாம்பட்டி, இட்டேரி சாலையில், ஜவுளி கடையை நடத்துபவர் மல்லி சுரேஷ், 35. அழகாபுரத்தில், ஜவுளி கடை நடத்துபவர் சங்கர், 40. இவருக்கு, பட்டு சேலைகளை மொத்த விலைக்கு, மல்லி சுரேஷ் விற்று வந்தார். 2018 நவ., 12 முதல், 2019 ஜன., 9 வரை, மல்லி சுரேஷ், ஒரு கோடியே, 17 லட்சத்து, 61 ஆயிரத்து, 680 ரூபாய் மதிப்பில் பட்டு சேலைகளை சங்கருக்கு விற்றுள்ளார். இதற்கான தொகையை அவர் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த, 10ல், மல்லி சுரேஷ் புகார்படி, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், சங்கரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X