பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு முறையாக பணம் வழங்காத கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேத்துப்பட்டு: தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு, முறையாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்காத கண்காணிப்பாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளராக ரோகேஷ் என்பவர் பணிபுரிகிறார். இவர், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்

சேத்துப்பட்டு: தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு, முறையாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்காத கண்காணிப்பாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளராக ரோகேஷ் என்பவர் பணிபுரிகிறார். இவர், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உண்டான பணத்தை, உரிய முறையில் பெற்று தர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த, 16ல், விவசாயிகள் தங்களுக்கு வர வேண்டிய, ஒரு கோடி ரூபாய் பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கண்காணிப்பாளர் ரோகேஷ் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், சஸ்பெண்ட் செய்யவும், ஒழுங்குமுறை விற்பனை கூட கமிஷனர் வள்ளலாரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து, ரோகேஷ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X