பொது செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், 2012 முதல் 2014 வரை மேலாளராக சுரேஷ், கணக்காளராக முரளிகாந்த், அலுவலக உதவியாளராக குருசீனிவாசன் பணியாற்றினர். அப்போது ஊழியர்களின் வைப்பு நிதி, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை ஆகிய திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும்,

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், 2012 முதல் 2014 வரை மேலாளராக சுரேஷ், கணக்காளராக முரளிகாந்த், அலுவலக உதவியாளராக குருசீனிவாசன் பணியாற்றினர். அப்போது ஊழியர்களின் வைப்பு நிதி, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை ஆகிய திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த பணத்தை அவர்கள் கணக்கில் மாற்றிக்கொண்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2014ல் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் சென்று, 2012ல், பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள அரசு கருவூலத்திற்கு சென்று, வாணியம்பாடி நகராட்சியில், 2012 முதல் செலவினங்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரை கேட்டதற்கு, இந்த முறைகேடு குறித்த வழக்கில், கூடுதல் தகவல்களை சேகரித்ததாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X