பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஆணையர் காலையில் பணிமாற்றம்; மாலையில் சஸ்பெண்ட்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி ஆணையர், காலையில் பணிமாற்றம் செய்யப்பட்டு, மாலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக புவனேஸ்வரன், 50, பணியாற்றி வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு தமிழக அரசு அவரை மயிலாடுதுறைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால் அவர், அங்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். இந்நிலையில், திருப்பத்தூர்

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி ஆணையர், காலையில் பணிமாற்றம் செய்யப்பட்டு, மாலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக புவனேஸ்வரன், 50, பணியாற்றி வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு தமிழக அரசு அவரை மயிலாடுதுறைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால் அவர், அங்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று மாலை, 4:00 மணிக்கு வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு, அதிரடியாக வந்து ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். அப்போது சில கோப்புக்களில், முழுமையான தகவலை ஆணையர் புவனேஸ்வரன் பதிவு செய்யவில்லை. மேலும் கலெக்டர் கேட்ட சில ஆவணங்களை அவர் தரவில்லை. விளக்கம் கேட்டதற்கு ஆவணங்கள் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆணையர் புவனேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். காலையில் பணிமாறுதல் உத்தரவு வந்த ஆணையர் புவனேஸ்வன், மாலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X