பொது செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவால் குழந்தை பாதிப்பு: ரூ.16 கோடி மதிப்பு ஊசி போட கலெக்டருக்கு மனு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: தசைநார் சிதைவால் பாதித்த, ஏழு மாத ஆண் குழந்தைக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட்டு சிகிச்சையளிக்க உதவும்படி, ராணிப்பேட்டை கலெக்டரிடம் தம்பதியினர் மனு கொடுத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. விவசாய கூலித்தொழிலாளி. இவர் மனைவி ரூபா, 25. இவர்கள், ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் நேற்று அளித்த

ராணிப்பேட்டை: தசைநார் சிதைவால் பாதித்த, ஏழு மாத ஆண் குழந்தைக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட்டு சிகிச்சையளிக்க உதவும்படி, ராணிப்பேட்டை கலெக்டரிடம் தம்பதியினர் மனு கொடுத்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. விவசாய கூலித்தொழிலாளி. இவர் மனைவி ரூபா, 25. இவர்கள், ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு சுஜய் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. கை, கால்கள் செயலிழந்து மூச்சு விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அரியவகை மரபியல் நோயான முதுகெலும்பு தசை நார் சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டில் தயாரிக்கப்படும், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஙூOஃஎஉNகுMஅ' (அஙஙீகு 101) ஊசி மருந்தை இரண்டு வயதுக்குள் செலுத்திவிட்டால், குழந்தையை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் கூறினர். கூலி வேலைக்கு செல்வதால், இந்த தொகையை எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே தமிழக முதல்வர், பிரதமர் நிதியுதவி திட்டத்தில் சிகிச்சை அளித்து, குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X