மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்

Added : ஜூலை 21, 2021
Share
வேலூர்: சத்துவாச்சாரியில், மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி பகுதி பாலாற்றில் இருந்து, மாட்டு வண்டி, பைக்குகளில் கடந்த சில மாதங்களாக, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. மணல் கடத்தும் கும்பலிடம், போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் வந்தது. எஸ்.பி., செல்வகுமார் நடத்திய

வேலூர்: சத்துவாச்சாரியில், மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி பகுதி பாலாற்றில் இருந்து, மாட்டு வண்டி, பைக்குகளில் கடந்த சில மாதங்களாக, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. மணல் கடத்தும் கும்பலிடம், போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் வந்தது. எஸ்.பி., செல்வகுமார் நடத்திய விசாரணையில், சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் தினகரன், 40, என்பவர் மணல் கடத்தல் கும்பலிடம் ஒரு நடைக்கு, 500 ரூபாய் மாமூல் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., செல்வகுமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X