பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
'2008 கோ20' என்ற பிரம்மாண்டமான சிறுகோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் வருவதாகவும், ஜூலை 24 அன்று அது பூமியை கடந்து பறக்கும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்ப உருவாக்கத்திற்கு பிறகான சிதைவுகள் சிறுகோள்கள் எனப்படுகின்றன. லட்சக்கணக்கான சிறுகோள்கள் அப்படி உருவாகி வலம் வந்துக் கொண்டுள்ளன. அதில் '2008 கோ20' என்ற சிறுகோள் தற்போது பூமிக்கு அருகில் உள்ளது. மணிக்கு 29

'2008 கோ20' என்ற பிரம்மாண்டமான சிறுகோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் வருவதாகவும், ஜூலை 24 அன்று அது பூமியை கடந்து பறக்கும் என நாசா தெரிவித்துள்ளது.



latest tamil news



சூரிய குடும்ப உருவாக்கத்திற்கு பிறகான சிதைவுகள் சிறுகோள்கள் எனப்படுகின்றன. லட்சக்கணக்கான சிறுகோள்கள் அப்படி உருவாகி வலம் வந்துக் கொண்டுள்ளன. அதில் '2008 கோ20' என்ற சிறுகோள் தற்போது பூமிக்கு அருகில் உள்ளது. மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோளானது மூன்று தாஜ்மஹால் அளவு இருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது. அதிவேகத்தில் இந்த கோள் பயணிப்பதால் அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் தகர்த்தெறியப்படும்.


latest tamil news



பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் பற்றிய நாசாவின் தரவுத்தளத்தின்படி, இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். அதனால் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகரும் என்று நாசா கூறியுள்ளது. பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும் நாசா தொடர்ந்து சிறுகோளை கண்காணித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202111:05:46 IST Report Abuse
ஸாயிப்ரியா கொரோனா படுத்துவது போதாதா? தள்ளிப் போ மோதாமல் கண்ணே.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
22-ஜூலை-202109:25:22 IST Report Abuse
sridhar Arivaalayam pakkam varumaa
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202101:40:13 IST Report Abuse
rupya அதென்ன அந்த விண் கல் பரப்பளவை தாஜ்மகாலுடன் தான் ஒப்பிடணுமா. சூரியனின் சுற்று வட்டப்பாதை கிரகங்களுக்கு மட்டும் தான் உள்ளன.நட்சத்திர சிதறல்களே விண் கற்கள். அவைகள் வான் வெளியில் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்கும்.அதற்கு தனிப்பட்ட சுற்று வட்டப்பாதை கிடையாது. இப்போது வரும் விண் கல் தூரத்திலிருந்து பார்ப்பதால் பூமியை நோக்கி வருவது போல் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X