கராத்தே தியாகராஜனை உடல் நலம்: அண்ணாமலை விசாரிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கராத்தே தியாகராஜனை உடல் நலம்: அண்ணாமலை விசாரிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை:இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த கராத்தே தியாகராஜனை சந்தித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உடல் நலம் விசாரித்தார்.தமிழக காங்., மூத்த நிர்வாகியாக இருந்தவர், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன். சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார். சட்டசபை தேர்தலின் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில்
 கராத்தே தியாகராஜனை உடல் நலம்: அண்ணாமலை  விசாரிப்பு

சென்னை:இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த கராத்தே தியாகராஜனை சந்தித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உடல் நலம் விசாரித்தார்.

தமிழக காங்., மூத்த நிர்வாகியாக இருந்தவர், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன். சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார். சட்டசபை தேர்தலின் போது, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் குஷ்புவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து பணியாற்றினார்.

சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வெடுத்து வரும் தியாகராஜனை, அண்ணாமலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதற்காக அண்ணாமலைக்கும், மாநில பா.ஜ., நிர்வாகிகளுக்கும், தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X