பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு வந்தது 7.22 லட்சம் தடுப்பூசி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, தமிழகத்திற்கு, 7.22 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், மாநில அரசிற்கு வந்த, 5.42 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன.தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தட்டுப்பாடு ஏற்பட்டு

சென்னை:மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, தமிழகத்திற்கு, 7.22 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், மாநில அரசிற்கு வந்த, 5.42 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, 5.42 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், தமிழக அரசிற்கு நேரடியாக வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கிற்கு, 1.56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள், தேவைப்படும் தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு, 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில், 7.22 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X