கொரோனா நோயாளி மூலம் குழந்தை மனைவியின் கோரிக்கை ஏற்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆமதாபாத்:செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் உள்ள கணவரின் மாதிரிகளை சேகரிக்க, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில்

ஆமதாபாத்:செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் உள்ள கணவரின் மாதிரிகளை சேகரிக்க, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர், வதோதரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல உறுப்புகள் செயலிழந்துள்ளதால், அவர் உயிர் பிழைப்பது கடினம் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.அதனால், கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை செய்ய முடிவு செய்துஉள்ளேன்.அதற்கு, கணவரின் மாதிரிகள் தேவை.

நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே மாதிரிகளை தர முடியும் என, மருத்துவமனை கூறியுள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை ஏற்றுள்ளது. கணவரின் மாதிரிகளை உடனடியாக சேகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X