சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பா.ஜ.,வின் புதிய நியமனம்புதுடில்லி: பா.ஜ.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக பிரேம் சுக்லா மற்றும் ஷாஜியா இல்மி ஆகியோர், நேற்று நியமிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு விஷயங்களிலும், கட்சியின் நிலைப்பாட்டை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைளை மே்றகொண்டதால், இவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 7 பேர் விடுவிப்புராய்பூர்:

பா.ஜ.,வின் புதிய நியமனம்

புதுடில்லி: பா.ஜ.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக பிரேம் சுக்லா மற்றும் ஷாஜியா இல்மி ஆகியோர், நேற்று நியமிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு விஷயங்களிலும், கட்சியின் நிலைப்பாட்டை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைளை மே்றகொண்டதால், இவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

7 பேர் விடுவிப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து, சமீபத்தில் ஏழு பேரை 'நக்சல்'கள் கடத்தி சென்றனர். போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தாங்கள் குறித்து எந்த தகவலும் போலீசாரிடம் தெரிவிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், நேற்று முன்தினம் ஏழு பேரையும் நக்சல்கள் விடுவித்தனர்.

கொலை முயற்சி வழக்கில் மாமியார்

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில், ஏப்., மாதம் திருமணம் முடிந்த, 22 வயது இளம்பெண்ணை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார், வற்புறுத்தி அவரை 'ஆசிட்' குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து, டில்லியில் சிசிச்சை பெறும் மருமகள், மகளிர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். அவர்களது கடிதத்தின் பேரில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவால், மாமியார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.

கல்யாண் சிங் கவலைக்கிடம்

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த பா.ஜ., தலைவருமான கல்யாண் சிங், உடல் நலன் பாதிக்கப்பட்டதால், லக்னோ மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால், பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாக, டாக்டர்கள் நேற்று கூறினர்.

சுவர் இடிந்து 7 பேர் பலி

சீதாபூர்: உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டம் லக் ஷ்மின்பூர் கிராமத்தில் பெய்த பலத்த மழையால், நேற்று காலை வீட்டு கூரை இடிந்து, ஒரே குடும்பத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் பலியாயினர். நங்கரி கிராமத்தில் சுவர் இடிந்து ராம் லோட்டன், 42, அவரது மனைவி அனிதா, 38, ஆகியோரும் மற்றொரு கிராமத்தில், ஒரு முதியவரும் இறந்தனர். பலியானோர் குடும்பத்தினருக்கு, தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பி.எஸ்.எப்., வீரர் தற்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரில், 'நக்சல்'கள் அதிகமுள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர் லக் ஷ்மன், 30, நேற்று முன்தினம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். ஹெலிகாப்டர் உதவியுடன், ராய்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X