லண்டனில் ஆபாச செயலி: குந்த்ரா நடத்தியது அம்பலம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மும்பை:ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான, ராஜ் குந்த்ரா, 45, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், ஆபாச படங்களை வெளியிடும் செயலியை நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர்
 லண்டனில் ஆபாச செயலி: குந்த்ரா நடத்தியது அம்பலம்

மும்பை:ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான, ராஜ் குந்த்ரா, 45, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், ஆபாச படங்களை வெளியிடும் செயலியை நடத்தி வந்துள்ளது

விசாரணையில் தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் தொழிலதிபர், ராஜ் குந்த்ரா. இவருடைய மனைவி, பிரபல பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி, ஆபாச படங்களில் நடிக்க வற்புறுத்தியதாக, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக சில பெண்கள், மும்பை போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில், ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, போலீசார் கூறியுள்ளதாவது: லண்டனைச் சேர்ந்த, 'கென்ரின்' என்ற நிறுவனம், 'ஹாட்ஷாட்ஸ்' என்ற ஆபாச படங்களை வெளியிடும் செயலியை நடத்தி வருகிறது. இதில் கட்டணம் செலுத்தி படங்களை பார்க்க முடியும்.லண்டன் நிறுவனம், ராஜ் குந்த்ராவின் உறவினருக்கு சொந்தமானது. இந்த செயலிக்கான ஆபாச படங்கள், மும்பை உட்பட நம் நாட்டில் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம், ராஜ் குந்த்ராவின் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால், தன் உறவினர் பெயரில், ராஜ் குந்த்ரா, லண்டனில் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக, ராஜ் குந்த்ரா உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X