௴ஸ்மிருதி குறித்து அவதுாறு பேராசிரியருக்கு சிறை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பிரோஸாபாத்:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தரக்குறைவான பதிவுகளை வெளியிட்ட வரலாற்று பேராசிரியருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரோஸாபாத்தின் எஸ்.ஆர்.கே., கல்லுாரியில், வரலாற்று துறை தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் ஷஹர்யார் அலி.

பிரோஸாபாத்:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தரக்குறைவான பதிவுகளை வெளியிட்ட வரலாற்று பேராசிரியருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரோஸாபாத்தின் எஸ்.ஆர்.கே., கல்லுாரியில், வரலாற்று துறை தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் ஷஹர்யார் அலி. இவர், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவான பதிவுகளை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார்.

இதையடுத்து போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கல்லுாரி பணியில் இருந்து பேராசிரியர் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவரது முன்ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கைது செய்ய தடை விதிக்க கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பிரோஸாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுராக் குமார் முன், பேராசிரியர் அலி நேற்று முன்தினம் சரணடைந்தார். அவர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X