பொது செய்தி

இந்தியா

இந்திய-பாக்., வீரர்கள் பக்ரீத் வாழ்த்து பரிமாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.தீபாவளி புத்தாண்டு ரம்ஜான் பக்ரீத் ஆகிய நாட்களில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை
 இந்திய-பாக்., வீரர்கள் பக்ரீத் வாழ்த்து பரிமாற்றம்

புதுடில்லி:பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தீபாவளி புத்தாண்டு ரம்ஜான் பக்ரீத் ஆகிய நாட்களில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5ல் ரத்து செய்தது.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் அரசு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எந்த பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குபின் எல்லையில் இந்திய - பாக்., வீரர்கள் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ராஜஸ்தானில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பார்மர் பகுதியிலும் அட்டாரி வாகா எல்லையிலும இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.அதேபோல் இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள புல்பாரி பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 51வது பட்டாலியன் வீரர்களும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X