தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தற்கொலை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை அனன்யா குமாரி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளி யில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அனன்யா குமாரி, 28. திருநங்கையான இவர், 'டிவி' செய்தி வாசிப்பாளர்,

திருவனந்தபுரம்:கேரளாவில், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை அனன்யா குமாரி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளி யில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அனன்யா குமாரி, 28. திருநங்கையான இவர், 'டிவி' செய்தி வாசிப்பாளர், 'வீடியோ ஜாக்கி' என பிரபலமானதுடன், கடந்த சட்டசபை தேர்தலில் வெங்கரா தொகுதியில் போட்டியிட்டார்.இதனால், மாநிலத்தின் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கையானார்.

இந்நிலையில், அனன்யா தன் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது மரணம் தற்கொலை தான் என, உறுதி செய்தனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது முதல், அனன்யா உடல் ரீதியாக பல்வேறு வேதனைகளை அனுபவித்து வந்ததாகவும், சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனையே இதற்கு காரணம் என, சக திருநங்கையர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அனன்யாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், சமூக நலத்துறை அமைச்சர் பிந்து ஆகி யோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X