போன் ஒட்டு கேட்பு விவகாரம் பார்லி., குழு விசாரிக்க முடிவு | Dinamalar

போன் ஒட்டு கேட்பு விவகாரம் பார்லி., குழு விசாரிக்க முடிவு

Added : ஜூலை 21, 2021
Share
புதுடில்லி:பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி, தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லி., நிலைக்குழு விசாரிக்க முடிவு செய்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.மத்திய அமைச்சர்கள் அஸ்வினி

புதுடில்லி:பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி, தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லி., நிலைக்குழு விசாரிக்க முடிவு செய்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரஹலாத் படேல், காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை கண்டித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரு நாட்களும், எந்த பணியும் மேற்கொள்ளாமல் முடங்கின. இந்நிலையில், போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான, தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லி., நிலைக்குழு விசாரணை நடத்த முடிவு செய்துஉள்ளது.

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள, 32 எம்.பி.,க் களில் பெரும்பாலானோர் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள். இந்தக்குழு வரும் 28ல் கூட உள்ளது. குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து விவாதிக்கப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப் பட உள்ளது. இதில், போன் ஒட்டு கேட்பு விவகாரத்தையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பற்றி, மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, தொலைதொடர்பு துறை ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X