பொது செய்தி

இந்தியா

தனி தேர்வர்களுக்கு ஆக., 16ல் பொது தேர்வு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:'சி.பி.எஸ்.இ., 10வது மற்றும் பிளஸ் - 2 தனி தேர்வர்களுக்கு, ஆகஸ்ட் 16 முதல், செப்டம்பர் 15 வரை, பொது தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலை தீவிரம்அடைந்ததை அடுத்து, 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ரத்து செய்தது. முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு,

புதுடில்லி:'சி.பி.எஸ்.இ., 10வது மற்றும் பிளஸ் - 2 தனி தேர்வர்களுக்கு, ஆகஸ்ட் 16 முதல், செப்டம்பர் 15 வரை, பொது தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரம்அடைந்ததை அடுத்து, 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ரத்து செய்தது. முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு, உள்மதிப்பீட்டு முறைப்படி முடிவுகளை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில், '10வது மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு, முந்தைய வகுப்புகளின் மதிப்பெண் அடிப்படையில் முடிவு அறிவிக்க இயலாது என்பதால், அவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்நிலையில், தனி தேர்வர்களுக்கான 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு, அடுத்த மாதம் 16ல் துவங்கி, செப்., 15 வரை நடைபெற உள்ளதாக சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது.

மேலும்,'இம்மாதம் 31ல், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்து இருந்தது.இது தொடர்பாக, மாணவர்கள் முந்தைய வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு சமர்ப்பிக்க, இம்மாதம் 22 வரை, பள்ளிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கால அவகாசம் மிகக் குறைவாக உள்ளதால், மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், கடைசி நேரத்தில் நிகழ்ந்த சில தவறுகளை சரி செய்யுமாறு, சி.பி.எஸ்.இ., யிடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பள்ளிகளுக்கான மதிப்பீட்டு கால அவகாசம் இம்மாதம் 25 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. எனவே, கடைசி நேர அவசரமின்றி மதிப்பீடுகளை செய்ய, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X