பொது செய்தி

இந்தியா

மொழி சிறுபான்மையினருக்கு சலுகை கேரளவாழ் தமிழர்களுக்கு வாய்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:மொழி சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் அறிக்கையால், கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.கேரளாவில், மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி ஆய்வு செய்யவும், அரசுக்கு பரிந்துரை வழங்கவும் திருவனந்தபுரம் திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளியின்

திருவனந்தபுரம்:மொழி சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் அறிக்கையால், கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கேரளாவில், மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி ஆய்வு செய்யவும், அரசுக்கு பரிந்துரை வழங்கவும் திருவனந்தபுரம் திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளியின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப் பட்டது.அவர் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கேட்டறிந்து, கேரள அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மொழி சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அந்தந்த மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அறிவிப்புகளும், தமிழ், கன்னடத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ், கன்னடத்தில் வெளியிடப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து கூறுகையில், ''தமிழகத்தில் ஒரு சமூகத்தினருக்கு என்ன ஜாதிச்சான்று வழங்கப்படுகிறதோ, அதே சான்று கேரளத்தில் வசிக்கும் அந்த சமூகத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ''அந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் குழு அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், மொழி சிறுபான்மையினரை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X