சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேசுவது புரியவில்லை என்றால், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் கூறிஉள்ளார். பேசுவது புரிவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பேசுவதே புரியாமல் இருப்பது ஒன்று. அதன் கருத்து புரியாமல்


புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேசுவது புரியவில்லை என்றால், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் கூறிஉள்ளார். பேசுவது புரிவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பேசுவதே புரியாமல் இருப்பது ஒன்று. அதன் கருத்து புரியாமல் இருப்பது மற்றொன்று. கமலை பொறுத்தவரை இரண்டுமே கோளாறு தான்.அவரது தமிழறிவு இளங்கோவடிகள், கவிஞர் கண்ணதாசன் போன்றோரிடம் இருந்து கற்று கொண்டது என்றும் சொல்கிறார்.கண்ணதாசன் பாடலில் தான் எத்தனை எளிமை இருக்கிறது. பாவம் அவரை ஏன், புரியாமல் பேசும் குட்டைக்குள் துாக்கி போடுகிறார்?ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை படிக்க அகராதி தேவையில்லை. அத்தனை எளிமையாக இருக்கும்.கமல் ஏன் இப்படி பேசுகிறார்? தாம் பேசுவது இன்னதென்று தனக்கே தெரியாமல் பேசுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறாரோ? அவரின் புத்திசாலித்தனத்தை, தனியார் 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதே, அனைவரும் புரிந்து கொண்டோம்.தெளிவில்லாமல் பேசுவது அறிவாளித்தனமும் அல்ல; அழகும் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைவிட கொடுமை, அவர் பேச்சை புரிந்து கொள்ள, 'கோனார் நோட்ஸ்' வாங்குங்கள் என சொல்வது!கமல் ஒன்றும் திருவள்ளுவர் இல்லை. இவரது வார்த்தைகளுக்கு உரை எழுத பரிமேலழகர் வருவதற்கு!அந்த வள்ளுவரே, 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்' எனக் கூறியுள்ளார்.
அதாவது, 'நம் பேச்சு, கேட்குறவங்களுக்கு பிடிக்கணும்; கேட்காதோர், அதை கேட்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட வேண்டும்' என்கிறார்.இன்னொரு குறளில், 'தன் கருத்தை பிறர் அறியுமாறு தெளிவாக விரித்து கூற தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லாத மலர் போன்றவர்' என்கிறார், திருவள்ளுவர்.இது கமலுக்கு புரிகிறதா?

புலி வாலை பிடித்த தி.மு.க.,

ரா.பரமசிவன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்களை திசை திருப்பும் வேலையில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாததால், மக்களிடம் எழும்பும் அதிருப்தியை திசை திருப்ப 'ஒன்றியம்' என, மத்திய அரசை அழைத்து 'போக்கு' காட்டுகிறது.'நீட் தேர்வு ரத்து' என்ற வாக்குறுதியை பற்றி யாரும் கேட்டுவிட கூடாது என்பதற்காக, நீட் பாதிப்பை கண்டறிய குழு ஒன்றை அமைத்து, ஒரு கவன திசை திருப்பல் நாடகம் போட்டது.இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய்; நகை மற்றும் கல்வி கடன் தள்ளுபடி; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தமிழக அரசு திணறுகிறது.
இதை மறைப்பதற்காக, கவர்னர் உரையில் 'ஜெய் ஹிந்த்' வார்த்தை இடம்பெறாமல் செய்து, அது குறித்து கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வை பேச செய்து, பரபரப்பை துாண்டி விட்டது தமிழக அரசு.தேச ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படும் தி.மு.க., அரசுக்கு, பாடம் கற்பிக்கும் முயற்சியாக 'கொங்கு நாடு' விவகாரத்தை பா.ஜ., கிளப்பியிருக்கிறது.புலி வாலை பிடித்த கதை தான் தி.மு.க.,வுக்கு!


பா.ஜ., இன்னும் வளரணும்!ஆர்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உண்மை வீட்டில் இருந்து கிளம்புவதற்குள், பொய்யானது உலகை சுற்றி வந்து விடும்' என்று ஒரு சொலவடை உண்டு. இது காங்கிரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது; பா.ஜ.,வுக்கு தான் தெரியவில்லை!தாங்கள் ஆட்சியில் செய்த தவறை சுத்தமாக மூடி மறைத்து, அதற்கான பழியை பா.ஜ., அரசு மீது துாக்கி போட காங்கிரசுக்கு தெரிந்து இருக்கிறது.ஆனால் தாங்கள் செய்துள்ள நல்ல விஷயங்கள் குறித்த தகவலை கூட மக்களிடம் சேர்க்க தெரியாமல், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு இருக்கிறது.காங்., ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் பொதுத்துறை வங்கியில் இருந்து விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.வங்கிகளுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டால் அது பின்னாளில் தங்களுக்கு வினையாய் வந்து சேரும் என்ற எச்சரிக்கை உணர்வில், வாய் மொழியாகவே உத்தரவிட்டுள்ளனர்.கடந்த 2014ல் ஆட்சியை இழந்ததும், அந்த கடனாளிகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைத்து விட்டனர்.இதில், 'பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தான், அவர்களுக்கு கடன் வழங்கியது; வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது' என பொய்யை சாமர்த்தியமாக பரப்பியது தான் காங்கிரசாரின் சாதனை.மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நேரத்தை விரயமாக்காமல், சட்டரீதியான நடவடிக்கையை சத்தமின்றி எடுத்து வருகிறது.விஜய் மல்லையா, நிரவ் மோடி தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், குற்றம் நடந்ததற்கு இந்தியாவில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சி தான் முதல் காரணம் என, பதிவு செய்துள்ளது.வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காங்கிரசோ பொய் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, நாடு முழுதும் அதை பரப்பி விட்டது.இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் அளவுக்கு பா.ஜ.,விடம் பிரசார பலம் இல்லாதது பெரும் குறை.விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9,371 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத் துறை, வங்கிகளுக்கு மாற்றம்
செய்துள்ளது.இது குறித்த செய்தியை கூட பா.ஜ.,வினரால் மக்களிடம் பரப்ப முடியவில்லை. இந்த விஷயத்தில் பா.ஜ.,
இன்னும் வளரணும்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஜூலை-202106:21:05 IST Report Abuse
D.Ambujavalli எந்த அரசும், மக்களின் விமர்சனம், அதிருப்தி என்று கிளப்பும்போது திசை திருப்ப வேண்டாத பிரசனைகளுக்கு முதலிடம் கொடுத்து, பசிக்கு azhukai பிள்ளைக்கு கிலு கிலு ப்பை காட்டும் வேலையைத்தான் செய்கிறது. மைய அரசு உள்பட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X