பொது செய்தி

தமிழ்நாடு

16 சார் - பதிவாளர் அதிரடி மாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் ஒரு மாவட்ட பதிவாளர் மற்றும் 16 சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்து, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் பல இடங்களில், மேலதிகாரிகள் ஆதரவுடன், குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் விதிமுறைகளை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்வது, தனி நபர்களை பணியில் அமர்த்துவது என,

சென்னை:தமிழகத்தில் ஒரு மாவட்ட பதிவாளர் மற்றும் 16 சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்து, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் பல இடங்களில், மேலதிகாரிகள் ஆதரவுடன், குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் விதிமுறைகளை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்வது, தனி நபர்களை பணியில் அமர்த்துவது என, முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.

இதனால், பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, செயலர் ஜோதிநிர்மலா, ஐ.ஜி., சிவன்அருள் ஆகியோர் திடீர் ஆய்வு செய்கின்றனர். இதில், புகார்கள் அடிப்படையில் பலரை இடமாற்றம் செய்ய உத்தரவிடுகின்றனர். சமீபத்தில், கோவை மண்டலத்தில் 14 சார் - பதிவாளர்கள் மாற்றப்பட்டனர்.

தற்போது, திருச்சி மண்டலத்தில், அரியலுார், கரூர், திருச்சி, புதுக்கோட்டை பதிவு மாவட்டங்களில், சார் - பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த மண்டலத்தில், ஒரு மாவட்ட பதிவாளர், 16 சார் - பதிவாளர்கள், அயல் பணி அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X