பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய முடிவு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு நெல் கொள்முதல் நிலையம், 40 சென்ட் பரப்பளவில் 100 டன் நெல்லை கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. அங்கு, நெல் துாற்றும் இயந்திரம், ஈரப்பதத்தை
 கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக  நெல் கொள்முதல் செய்ய முடிவு

சென்னை:தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு நெல் கொள்முதல் நிலையம், 40 சென்ட் பரப்பளவில் 100 டன் நெல்லை கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. அங்கு, நெல் துாற்றும் இயந்திரம், ஈரப்பதத்தை கண்டறியும் கருவி, மின்னணு தராசு உள்ளிட்டவை இருக்கும்.

சொந்த கட்டடத்தில் நிரந்தர நிலையம் அமைக்க, 40 லட்சம் ரூபாய் செலவாகும். மொத்த கொள்முதல் நிலையங்களில், 60 சதவீதத்திற்கும் மேல், தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திறக்கப்படுகின்றன.தற்போது, டெல்டா அல்லாத சில மாவட்டங்களில், கூட்டுறவு சங்கங்கள் மிக குறைந்தளவில் வாணிப கழகம் சார்பில் நெல் வாங்குகிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள், பயிர் கடன் வழங்குகின்றன.

வாணிப கழகத்தை விட, கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு அதிக கிடங்குகள் உள்ளன. வரும் காலங்களில், உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து பாதுகாக்கப்பட உள்ளது. இதற்காக, டெல்டா மாவட்டங்களிலும் வாணிப கழகம் சார்பில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் நிலையங்களை துவக்கி, நெல் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, அரசு அனுமதியுடன் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X