பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸிலும் கோஷ்டி பூசல்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணியினரிடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அவரவர் ஆதரவாளர்கள் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்., மேலிடம் தலையிட்டு இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என கூறியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணியினரிடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அவரவர் ஆதரவாளர்கள் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்., மேலிடம் தலையிட்டு இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என கூறியுள்ளது.



latest tamil news



தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், “சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரும் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள். கர்நாடகாவில் காங்கிரஸின் திட்டம் 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது. எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்.” என்றார்.


latest tamil news



பஞ்சாபில் இதே போன்று காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங், எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் மோதல் காணப்பட்டது. மாறி மாறி டில்லி சென்று ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோரை சந்தித்த பின் ஆளுக்கொரு பதவி என தந்து வாயடைத்து அனுப்பினர். அதன் படி பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு வர உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அமரீந்தர் சிங்கே முதல்வர் வேட்பாளராக களம் காண உள்ளார். ஆனால் கர்நாடகாவில் அப்படி யாரையும் முதல்வர் வேட்பாளராக காங்., அறிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-ஜூலை-202109:06:11 IST Report Abuse
duruvasar தமிழக ஊராட்சி ஒன்றியத்தை தவிர மற்ற எல்லா ஊராட்சி ஒன்றியத்திலும் இரண்டு பேர்களிடையேதான் மோதல். நம்ம ஊரில் கோஷ்டிகள். சண்டை வராமாதிரி தெரிந்தால் அண்ணன் அழகிரி அழுது விடுகிறார். கண் இருப்பதால் கண்ணீர் வரும் என்ற அழகிரி தீரீ யின் சொந்தகாரர்.
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
22-ஜூலை-202108:31:50 IST Report Abuse
M.S.Jayagopal காங்கிரஸ் தலைமையின் பலவீனத்தையே இது காண்பிக்கின்றது. அந்தோ பரிதாபம்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
22-ஜூலை-202108:26:40 IST Report Abuse
VENKATASUBRAMANIAN காங்கிரஸ் கர்நாடகவிலும் மூழ்குகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X