சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூலை 22, 1972துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற கிராமத்தில் 1914 ஆக., 23ம் தேதி பிறந்தவர் டி.எஸ்.பாலையா. நடிகராக வேண்டும் என்ற ஆசையில், 14வது வயதில் வீட்டில் இருந்து வெளியேறி 'பாலமோஹன சபா' நாடக கம்பெனியில் சேர்ந்தார்.வசன கர்த்தா கந்தசாமி முதலியார் வழியாக, 1936ல் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய, சதிலீலாவதி படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில்


இதே நாளில் அன்று


ஜூலை 22, 1972



துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற கிராமத்தில் 1914 ஆக., 23ம் தேதி பிறந்தவர் டி.எஸ்.பாலையா. நடிகராக வேண்டும் என்ற ஆசையில், 14வது வயதில் வீட்டில் இருந்து வெளியேறி 'பாலமோஹன சபா' நாடக கம்பெனியில் சேர்ந்தார்.வசன கர்த்தா கந்தசாமி முதலியார் வழியாக, 1936ல் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய, சதிலீலாவதி படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் தான் எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு மற்றும் எம்.ஜி.ஆர்., அறிமுகமாகினர்.
கதாநாயகன், வில்லன் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் டி.எஸ்.பாலையா ஜொலித்தார்; சொந்தக் குரலிலும் பாடியிருக்கிறார். காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், பாமா விஜயம் உட்பட 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மூன்று, கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். 1972 ஜூலை 22ம் தேதி தன் 58வது வயதில் இயற்கை எய்தினார்.நடிகர் டி.எஸ்.பாலையா, காலமான தினம் இன்று!


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
27-ஜூலை-202108:07:26 IST Report Abuse
Vaduvooraan எம்.ஆர்.ராதா, வி.கே ராமசாமி போல தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை அற்புதமான கலைஞர், எந்த பாத்திரத்திலும் அனாயசமாக சோபிக்கும் திறன். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு அசல் தவில் கலைஞரை போன்ற அங்க அசைவுகளுடன் முத்துராக்கு என்ற பாத்திரத்தில் கலக்கி இருப்பார். காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் கேட்கவே வேண்டாம். அந்த நாள் கலைஞர்கள் பலருக்கு காசு, உடல் நலம் இரண்டையுமே காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் கஷ்டங்களை தாம்பூலம் வைத்து அழைப்பார்கள்..அப்படியே காணாமல் போவார்கள். மறக்க முடியாத ஒரு கலைஞர். நினைவு கூர்ந்த தினமலருக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X