சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கிச்சனிலும் கொத்தமல்லி வளர்க்கலாம்!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
காய்கறி கடைகளில் வாங்கி வரும் கொத்தமல்லி தழை, பல நேரங்களில் மணப்பதில்லை. அதற்குப் பதில், 'கமகம'க்கும் கொத்த மல்லியை, வீட்டில் சிறிய இடத்தில் வளர்ப்பது பற்றி கூறுகிறார் தோட்டக்கலை ஆர்வலர் ஆரண்யா அல்லி: கொத்தமல்லியை சிறிதளவாவது பயன்படுத்தாமல் நம் சமையல் நிறைவடையாது. ஆனால், மணத்தை எதிர்பார்த்து, சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி பெரும்பாலும் நிறத்தை மட்டுமே
சொல்கிறார்கள்

காய்கறி கடைகளில் வாங்கி வரும் கொத்தமல்லி தழை, பல நேரங்களில் மணப்பதில்லை. அதற்குப் பதில், 'கமகம'க்கும் கொத்த மல்லியை, வீட்டில் சிறிய இடத்தில் வளர்ப்பது பற்றி கூறுகிறார் தோட்டக்கலை ஆர்வலர் ஆரண்யா அல்லி: கொத்தமல்லியை சிறிதளவாவது பயன்படுத்தாமல் நம் சமையல் நிறைவடையாது.

ஆனால், மணத்தை எதிர்பார்த்து, சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி பெரும்பாலும் நிறத்தை மட்டுமே கொடுக்கிறதே தவிர, மணத்தை தருவதில்லை. காரணம், பல வித ரசாயனங்கள் சேர்த்து, அது விளைவிக்கப்படுவது தான்.அதற்கு மாற்றாக, நம் வீட்டில், நமக்கு தேவையான அளவு கொத்தமல்லியை வளர்க்க முடியும். எந்த அளவுக்கு நமக்கு தேவை என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ற பாத்திரங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி செடியின் வேர்கள் மிகவும் மெல்லியவை, சிறியவை என்பதுடன், அவை, 6 அங்குல வேர்களை மட்டுமே அதிகபட்சம் கொண்டிருக்கும் என்பதால், வேர் பாயும் வகையில் பாத்திரம் இருக்க வேண்டும்.பாத்திரம் தான் என்றில்லாமல், பிளாஸ்டிக் வாளி, டப்பா, கைப்பிடி உடைந்த பைகள், கெட்டியான பாலிதீன் பைகள், பழைய ஜீன்ஸ் பேன்ட் என எதிலும் கொத்தமல்லி வளர்க்கலாம். இதற்கு தேவையான மண், 'பொலபொல'வென உதிர்ந்து போயிருக்க வேண்டும். காற்று எளிதில் ஊடுருவும் வகையில், மண் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு செம்மண் ஒரு பங்கு, மாட்டு எரு ஒரு பங்கு, மணல் அரை பங்கு கலந்து, மண்ணை தயாரிக்க வேண்டும்.மண் கிடைப்பதில் சிக்கல் இருந்தால் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், 'கம்போஸ்ட்' எனப்படும் மக்கிய காய்கறி கழிவு உரத்தை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவால் தயாரிக்கப்படும் பிளாக்கை பயன்படுத்துவதாக இருந்தால், அதை நன்கு நீரில் அலசி, அதன் துவர்ப்பு தன்மை நீங்கச் செய்ய வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் கொத்தமல்லி விதையை தரமாக வாங்கி, அதை கை அல்லது காலால் நசுக்கி உடைத்துக் கொள்ள வேண்டும். கனமான பொருளால் உடைத்தால், முனைகள் உடைந்து முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.விதைக்க எடுத்துள்ள பாத்திரத்தின் மீது உடைக்கப்பட்ட விதைகளை துாவி, அரை அங்குல உயரத்திற்கு தளர்வாக மண் கலவையை போட்டு மூட வேண்டும். அதன் மீது, செய்தித்தாளை பரப்பி, அதன் மேல் தண்ணீரை தெளித்து, அந்த தண்ணீர் மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக விழச் செய்ய வேண்டும். ஐந்தாவது நாள் செய்தித் தாளை நீக்கி பார்த்தால், முளை விட்டிருக்கும். அதன் பின், ஸ்பிரே மூலம் தண்ணீரை துாவி வந்தால், 30 நாட்களில் நன்கு வளர்ந்த, மணமுள்ள கொத்தமல்லி விளைந்திருக்கும். தேவைக்கு ஏற்ப அவற்றை பறித்து, சமையலுக்கு பயன்படுத்தலாம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X