அப்டேட் ஆகாத அரசு கேபிள், டிவி நிர்வாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அப்டேட்' ஆகாத அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம்

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை:அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம் மற்றும் இயக்கக பிரிவிற்கு, புதிய பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டும், அவர்களது விபரங்கள் இணையதளத்தில் இடம் பெறவில்லை. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்குவதற்காக, 2007ல் அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், கேபிள், 'டிவி' சேவையை கவனிக்க, நிர்வாக பொது மேலாளரும், அரசு இ - சேவை மையங்களை கையாள, இயக்கக பிரிவு

சென்னை:அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம் மற்றும் இயக்கக பிரிவிற்கு, புதிய பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டும், அவர்களது விபரங்கள் இணையதளத்தில் இடம் பெறவில்லை.

குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்குவதற்காக, 2007ல் அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், கேபிள், 'டிவி' சேவையை கவனிக்க, நிர்வாக பொது மேலாளரும், அரசு இ - சேவை மையங்களை கையாள, இயக்கக பிரிவு பொது மேலாளரும் உள்ளனர்.இதில் நிர்வாக பொது மேலாளராக எஸ்.அனிதாவும், இயக்கக பொது மேலாளராக இ.ஆனந்த குமாரும் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் மாற்றப்பட்டு, புதிய பொது மேலாளர்களாக செ.ரவியும், நா.சந்தோஷினியும் நியமிக்கப்பட்டனர்.பொறுப்பேற்ற பின்பும், அரசு கேபிள், 'டிவி' நிறுவன இணையதளத்தில், அவர்களது பெயர் இடம் பெறாமல், பழைய பொது மேலாளர்கள் பெயர்களே உள்ளன. அதிலும், ஒருவரது பெயரே இரு பதவியிலும் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

இது தவிர, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் தலைவராக சிவகுமார் பொறுப்பேற்று, 10 நாட்களுக்கு பின்பே, அவரது பெயர் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X