பொது செய்தி

தமிழ்நாடு

நல்லா யோசியுங்கள்: சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:'மோசடி கும்பலிடம் வங்கி ஏ.டி.எம்., கார்டு ரகசிய குறியீடு எண் உள்ளிட்ட விபரங்களை பகிர வேண்டாம்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.'வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கு இன்று தான் கடைசி நாள். தவறினால் வங்கி கணக்கு முடக்கப்படும். உங்களால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாது. 'உடனடியாக, ஏ.டி.எம்., கார்டு ரகசிய குறியீடு எண்ணை சொல்லுங்கள் அல்லது மொபைல்

சென்னை:'மோசடி கும்பலிடம் வங்கி ஏ.டி.எம்., கார்டு ரகசிய குறியீடு எண் உள்ளிட்ட விபரங்களை பகிர வேண்டாம்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.'வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கு இன்று தான் கடைசி நாள். தவறினால் வங்கி கணக்கு முடக்கப்படும். உங்களால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாது.

'உடனடியாக, ஏ.டி.எம்., கார்டு ரகசிய குறியீடு எண்ணை சொல்லுங்கள் அல்லது மொபைல் போன் எண்ணிற்கு வந்துள்ள ஓ.டி.பி., எண்ணை தெரிவியுங்கள்' எனக் கேட்டு மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.அத்துடன், சினிமா பிரபலங்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயரில் போலியாக, 'பேஸ்புக்' கணக்கு துவங்கி, அவர்களின் நண்பர்களிடம் வசூல் வேட்டையில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் குறித்து, நாட்டில் எந்த மூலையில் வசித்தாலும், வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், https://www.cybercrime.gov.in/ என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது. உடன், 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

இது குறித்து தமிழக காவல் துறை சைபர் கிரைம் போலீசார், 'நல்லா யோசிங்க' என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வங்கி மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருப்பது குறித்த விபரங் களை வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X