பொது செய்தி

தமிழ்நாடு

வரவு செலவு இன்றி தணிக்கை 10 அதிகாரிகள் மீது நடவடிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் வரவு - செலவு கணக்கு இல்லாமல், தணிக்கை செய்தது தொடர்பாக, 10 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதற்காக, மாநிலம் முழுதும் 9,600 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் தினமும் வழங்கும் பால், பணப்பட்டுவாடா, செலவினங்கள் உள்ளிட்ட விபரங்களை,

சென்னை:பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் வரவு - செலவு கணக்கு இல்லாமல், தணிக்கை செய்தது தொடர்பாக, 10 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதற்காக, மாநிலம் முழுதும் 9,600 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் தினமும் வழங்கும் பால், பணப்பட்டுவாடா, செலவினங்கள் உள்ளிட்ட விபரங்களை, வரவு - செலவு கணக்கு புத்தகத்தில் எழுத வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யப்பட்டு கணக்கு, வழக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாமல், பல மாவட்டங்களில் தணிக்கை நடந்துள்ளது. இதன் வாயிலாக, பால் கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆவின் நிறுவனத்திற்கும், பால் கூட்டுறவு சங்கங்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, வரவு - செலவு கணக்கு புத்தகம் இல்லாமல் தணிக்கை செய்தது தொடர்பாக, சேலம் மாவட்டத்தில், மூன்று பால் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் கீழ் பணிபுரிந்த ஏழு தணிக்கையாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பால் கூட்டுறவு துறையின் தணிக்கை இயக்குனர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.அரசின் நடவடிக்கைக்கு பயந்து, ஈரோடு மாவட்ட தணிக்கை துறை துணை இயக்குனர் விடுப்பில் சென்றுள்ளார். இதேபோல, அடுத்தடுத்த மாவட்டங்களில் தணிக்கை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X