அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:''தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர்., என்ற சமூக பொறுப்பு நிதியின் கீழ், கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை, மத்திய பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்

சென்னை:''தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர்., என்ற சமூக பொறுப்பு நிதியின் கீழ், கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை, மத்திய பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து பேசினார்.


ஒதுக்கீடு



பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கொரோனா தொற்று தடுப்புக்காக தமிழகம், மத்திய பிரதேச மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இரு தரப்பிலும் ஆலோசித்தோம். தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளில் 12.87 லட்சம் தடுப்பூசிகள் உட்பட 1.83 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. ஒருவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும்; அதன்படி இன்னும், 10 கோடி தடுப்பூசிகள் தேவை.மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை ஒதுக்குகிறது.

ஜூலையில் இதுவரை 17 லட்சம் தடுப்பூசிகள் வந்ததில், 4 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளன.


100 சதவீத உண்மை

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட கட்டணம் என்பதால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, மீதமுள்ள 13 லட்சம் தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்கி பொதுமக்களுக்கு பயன்படுத்த உள்ளது.இந்த தடுப்பூசிகளை சமூக பொறுப்பு நிதி வாயிலாக கொள்முதல் செய்து, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் திட்டம், கோவையில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

தற்போது போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், மூன்று நாட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது. தமிழகத்திற்கு சிறப்பு தொகுப்பாக, 1 கோடி தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுள்ளோம். மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. பல மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது 100 சதவீத உண்மை.

ஒப்பந்த அடிப்படையில், மருத்துவ துறையில் சேர்ந்தவர்கள் நீக்கப்படவில்லை; விதிமுறைகளின்படி பணி நிரந்தரம் செய்யப்படுவர். இனி, தனியார் நிறுவனங்கள் வாயிலாக பணி வழங்கப்படாது; நேரடியாக பணி நியமனம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


'தொழில்நுட்பத்தை பகிர தயார்'



மத்திய பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் அளித்த பேட்டி:தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் சென்னை வந்திருந்தேன். தற்போது மீண்டும் வந்துள்ளேன்.

தமிழகம் - மத்திய பிரதேசம் இடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், தொழில்நுட்பம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X