பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வகையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள்; வேலுார், திருப்பத்துார்,

சென்னை:தமிழகத்தில், 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வகையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள்; வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு பலத்த காற்று வீசும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X