அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க., -பொது செயலராகிறார் வைகோ மகன் வையாபுரி?

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச்செயலர் பதவி வழங்குவதன் முன்னோட்டமாக, காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவிக்கு, வையாபுரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர்கள் நாசரேத் துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தனர்.அவர்கள் வகித்த வந்த பதவிக்கு, அக்கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது. ம.தி.மு.க.,
ம.தி.மு.க., -பொது செயலர், வைகோ மகன் வையாபுரி

ம.தி.மு.க., பொதுச்செயலர் பதவி வழங்குவதன் முன்னோட்டமாக, காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவிக்கு, வையாபுரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர்கள் நாசரேத் துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தனர்.
அவர்கள் வகித்த வந்த பதவிக்கு, அக்கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.

ம.தி.மு.க., உயர்நிலைக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பதவியை எதிர்பார்க்கின்றனர்.ஆனால், பொதுச் செயலர் வைகோவின் மகன் வையாபுரிக்கு, துணைப்பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

வைகோவின் உடல் நலம் கருதி, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், அவர் வகித்து வரும் பொதுச் செயலர் பதவியை வையாபுரி தான் ஏற்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, துணை பொதுச் செயலராக வையாபுரியை நியமித்து, அரசியல் பாடத்தை வைகோ கற்றுத்தர வேண்டும் என, கட்சியினர் விருப்பம்தெரிவித்துள்ளனர்.

அரசியலை விரும்பாமல் ஒதுங்கி இருந்த வையாபுரி, தொண்டர்களின் வற்புறுத்தலால், சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். தற்போது அவருயை படங்கள் பேனர், போஸ்டர்களில், வைகோவுக்கு இணையாக போடப்பட்டு வருகிறது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், வாழ்த்து தெரிவித்த வையாபுரி, அவருக்கு நெருக்கமானார். வைகோ பங்கேற்க முடியாத கட்சியினரின் இல்ல விழாக்களில் வையாபுரி பங்கேற்று வருகிறார். எதிர்காலத்தில், கட்சியின் பொதுச் செயலர் பதவியை நோக்கி, வையாபுரியின் அரசியல் நகர்வுகள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை என, ம.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜூலை-202119:57:29 IST Report Abuse
M  Ramachandran இதெல்லாம் வேடிக்கையில்லை.சென்னையில் தெருவெல்லாம் ஒரு இலங்கை தமிழர்களின் தீ மு காவுடன் சேர்ந்து பதவிக்கு மடிபிட்சியெடுத்த துரோகியை தமிழல்யீல விடுதலை தலைவர் ப்ரபாகரனநை ஒப்பிட்டு போஸ்டர் எழுதும் த்ரோகிகலை ராஜ பக்கதேஆயிடம் கையேந்தி பரிசு வாங்கி சிரித்த முகமுடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த கும்பலை என்ன செய்வது. அவர் உயிருடன் இல்லை என்ற தைறியத்தில் எனதை வேண்டு மென்றாலும் ஆசை போராடுபவர்களை என்ன இனத்தில் சேர்ப்பது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஜூலை-202104:13:52 IST Report Abuse
meenakshisundaram யாருமே வராத கடையில் எவனுக்கய்யா டீ ஆத்துறீங்க ?ஆனா ஒன்னு கலிங்கா பட்டி கிராமத்திலே இவன் பேமிலி பெரும் ஆளா இருக்கும் ஜமீனுக்கு வாரிசு உருவாச்சு ஆனா வையாபுரி வைகோ போல 'போட்டதை அப்படியே திருப்பி போட்டு பேசும் ' சாமர்த்தியம் (?) 'உள்ளவரா ?மேலும் உதய நிதிக்கு ஜால்ரா அடிப்பாரா ?திமுக தலைமை இந்த அப்பாய்ண்ட் மென்ட் யை அங்கீகரிச்சாச்சா ?
Rate this:
Cancel
Ramachandran V - Chennai,இந்தியா
23-ஜூலை-202119:38:48 IST Report Abuse
Ramachandran V வேறு யாராவது செயலாளர் ஆகி விட முடியுமா? திராவிட katciyil
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X