பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 1 டி.எம்.சி., தண்ணீர் நடப்பாண்டில் ஆந்திரா விடுவிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:நடப்பு நீர் வழங்கும் காலத்தில், தமிழகத்திற்கு 1 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, நேற்று வரை ஆந்திர அரசு வழங்கிஉள்ளது. தமிழகத்திற்கு ஆண்டு தோறும், இரண்டு தவணைகளாக, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, ஆந்திர அரசு வழங்க வேண்டும். கடந்த, 2020 - 21ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், ஜூன் 16 வரை, 8.05 டி.எம்.சி., நீரை மட்டுமே ஆந்திரா வழங்கியது. தமிழகத்தின் ஊத்துக் கோட்டை, 'ஜீரோ

சென்னை:நடப்பு நீர் வழங்கும் காலத்தில், தமிழகத்திற்கு 1 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, நேற்று வரை ஆந்திர அரசு வழங்கிஉள்ளது. தமிழகத்திற்கு ஆண்டு தோறும், இரண்டு தவணைகளாக, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

கடந்த, 2020 - 21ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், ஜூன் 16 வரை, 8.05 டி.எம்.சி., நீரை மட்டுமே ஆந்திரா வழங்கியது. தமிழகத்தின் ஊத்துக் கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' எல்லைக்கு, ஜூன் 17 முதல், கிருஷ்ணா நீர் வரத் துவங்கியது. ஜூன் 30 வரை, 8.20 டி.எம்.சி., நீரை, முந்தைய நீர் வழங்கும் காலத்தில் ஆந்திரா விடுவித்தது. ஜூலை 1 முதல் நடப்பு, 2021 - 22ம் ஆண்டிற்கான நீர் வழங்கும் காலம் துவங்கியது.

அதன்படி, இந்த காலத்தில் நேற்று வரை, 1 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதத்திற்குள், மேலும் 4 டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும் என, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆந்திர முதல்வரிடம் எடுத்துக்கூறி, இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக, அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X