பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள பல்கலை ப9டிப்பில் சேர வாய்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில், திறந்த நிலை மற்றும் தொலைதுாரக் கல்வி வழியே, மீன்வளம் குறித்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' எனப் பல்கலை துணைவேந்தர் சுகுமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மீன்வளப் பல்கலையில், திறந்த நிலை மற்றும் தொலைதுாரக் கல்வி வழியே, நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன்

சென்னை:'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில், திறந்த நிலை மற்றும் தொலைதுாரக் கல்வி வழியே, மீன்வளம் குறித்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' எனப் பல்கலை துணைவேந்தர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மீன்வளப் பல்கலையில், திறந்த நிலை மற்றும் தொலைதுாரக் கல்வி வழியே, நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு குறித்த, ஆறு மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட உள்ளன.நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு படிப்பு வகுப்புகள், துாத்துக்குடி, பொன்னேரி, தஞ்சாவூர், மாதவரம், சென்னை, பவானிசாகர், ஈரோடு பகுதியிலும்; மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு படிப்பு வகுப்புகள், தலைஞாயிறு, நாகப்பட்டினம், துாத்துக்குடி, பொன்னேரி மற்றும் சென்னையில் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள், https://www.tnjfu.ac.in/directorates/othersdir/doe என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வண்டும். பயிற்சிக் கட்டணம், 3,000 ரூபாய்.விருப்பம் உள்ளவர்கள் பயிற்சிக் கட்டணத்தை, The DEE, TNJFU, Nagapattinam என்ற பெயரில், ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், 'விரிவாக்க கல்வி இயக்குனர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை, வெட்டாறு நதிக்கரை வளாகம், நாகப்பட்டினம் - 611002' என்ற முகவரிக்கு, வரும், 30ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், நேரிலோ, தபாலிலோ சமர்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X