கொலை வெறி தாக்குதல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வெறி தாக்குதல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை:'கட்சி அலுவலகத்திற்கு மகளுடன் செல்லும் போது, வழிமறித்து தாக்குதல் நடத்திய, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர், சுமதி வெங்கடேஷ், 52; பா.ஜ., மாநில செயலர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அணியினருடன் அளித்துள்ள புகார்:என் மகளுடன்,

சென்னை:'கட்சி அலுவலகத்திற்கு மகளுடன் செல்லும் போது, வழிமறித்து தாக்குதல் நடத்திய, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர், சுமதி வெங்கடேஷ், 52; பா.ஜ., மாநில செயலர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அணியினருடன் அளித்துள்ள புகார்:என் மகளுடன், இரு தினங்களுக்கு முன், காரில் தி.நகரில் உள்ள, கட்சி அலுவலகம் சென்றேன். என் வீட்டிற்கு அருகே, பாடி புதுநகர் சந்திப்பு பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், என் கார் மீது மோதினர்.

காரை வழிமறித்து, கட்சிக் கொடியை பறித்து வீசினர்.சொல்லவே முடியாத வார்த்தைகளில் திட்டியதுடன், என்னை கொல்லாமல் விட மாட்டேன் என, கத்தினர். மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால், என் கார் ஓட்டுனர் கருப்பசாமி கீழே இறங்கி, தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றார். 'உன்னை தான் முதலில் கொல்ல வேண்டும்' என, அவரை கடுமையாக கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினர். என் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X