அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு அன்புமணி பாராட்டு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:'பி.பார்ம்., படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி என்ற அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம்., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்' என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'மருந்தாளுனர்

சென்னை:'பி.பார்ம்., படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி என்ற அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம்., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்' என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம்., படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும்' என 11ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேயேற்று, தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதன் வாயிலாக, மிகப் பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது. மருந்தாளுனர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசு பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம்., பட்டதாரிகள் பயனடைவர். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X