சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு கைதாகிறார் சிவசங்கர் பாபா

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பாலியல் தொல்லை வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவை, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.சென்னை, கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியை சிவசங்கர் பாபா, 73, நடத்தி வருகிறார். இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்
 மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு கைதாகிறார் சிவசங்கர் பாபா

சென்னை:பாலியல் தொல்லை வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவை, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை, கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியை சிவசங்கர் பாபா, 73, நடத்தி வருகிறார். இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, டில்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். பின், இவருக்கு உடந்தையாக இருந்த சீடர் சுஷ்மிதா, 37 என்பவரையும் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், சிவசங்கர் பாபா சிறுமியருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இரண்டு, 'போக்சோ' வழக்குகளில், அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை, செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபா, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்யப்படுவார் என, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, ஐந்து ஆசிரியர்களிடம் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்கள் வீடுகளில், 'சம்மன்' ஒட்டினர். இவர்களில் மூன்று பேர் விளக்கம் அளித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
22-ஜூலை-202104:23:31 IST Report Abuse
RaajaRaja Cholan இவனை போன்ற குற்றவாளிகளை அவர் இவர் என்று அழைப்பது ஏன் ?. அவன் இவன் , அது இது என்று அழைப்பதே அதிக மரியாதை இவனை போன்ற யோக்கியங்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X