சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ கேரளாவில் குற்றவாளி கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில், 'மை இந்தியா' கட்சி சார்பில் போட்டியிட்ட வீரலட்சுமிக்கு, 'வாட்ஸ்- ஆப்'பில் ஆபாச வீடியோ அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி, 35. தமிழர் முன்னேற்றப் படை என்ற கட்சியின் நிறுவன தலைவர். சட்டசபை தேர்தலில், மை இந்தியா கட்சியின் சார்பில், பல்லாவரம் தொகுதியில்

சென்னை:சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில், 'மை இந்தியா' கட்சி சார்பில் போட்டியிட்ட வீரலட்சுமிக்கு, 'வாட்ஸ்- ஆப்'பில் ஆபாச வீடியோ அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி, 35. தமிழர் முன்னேற்றப் படை என்ற கட்சியின் நிறுவன தலைவர். சட்டசபை தேர்தலில், மை இந்தியா கட்சியின் சார்பில், பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார்.மார்ச் 17ல் அவரது மொபைல் போனுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் ஆபாச வீடியோக்கள் வந்தன. பரங்கிமலை துணை கமிஷனரிடம் வீரலட்சுமி புகார் கொடுத்தார். அப்புகார், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

மார்ச் 18ல், சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தேர்தல் பணிகளால், கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.சில நாட்களுக்கு முன், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருபவர்களின் பெயர்களை கூறி, 'அவர்களின், 'அதை' அறுத்து விடுகிறேன். அப்போதாவது நடவடிக்கை எடுப்பீர்களா' என அரிவாளுடன் கேள்வி எழுப்பி வீரலட்சுமி, 'வீடியோ' வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

இதையடுத்து, சங்கர் நகர் போலீசாரின் தீவிர விசாரணையில், வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியது, அரியலுார், உடையார்பாளையம் தாலுகா, கரைமேடையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, 36 என்பதும்; அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன், மனைவி மெர்சியிடம் சண்டை போட்டு, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்ததும் தெரிந்தது.

சங்கர் நகர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று நேற்று முன்தினம் இரவு, ஆரோக்கியசாமியை கைது செய்து அழைத்து வந்தனர். நேற்று காலை, தாம்பரம் மாஜிஸ்திரேட் அனுப்பிரியா வீட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X